கம்பராமாயணம் - திரு அ.கி.வரதராசனுடன்
சந்திப்பு 9
மார்ச் 3, 2017 - ஜூரோங்
ஈஸ்ட் பொது நூலகம்
திரு அ.கி.வரதராசனின் உரையை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை
அயோத்தியா
காண்டம், தைலம் ஆட்டு படலம்
(சில
பாடல்கள் விடுபட்டுள்ளன)
சென்ற
வகுப்பில் பார்த்த நகர் நீங்கு படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது தைலம் ஆட்டு
படலம். இராமன் வனம் ஏகி விட்டான் என்ற செய்தியைக் கேட்ட மறு நொடி தசரதனின் உயிர்
பிரிகிறது. கேகய நாட்டில் தனது தாத்தா வீட்டில் உள்ள பரதன் அயோத்திக்குத் திரும்பும்
வரை தசரதனின் உடல் மருத்து குணமுள்ள எண்ணெயில் பாதுகாக்கப்படுவதால்
இப்படலத்துக்குத் ‘தைலம் ஆட்டு படலம்’ என்ற பெயர்.
தம்பியோடும், மனைவியோடும் நகர் நீங்கிய குரிசிலைப் (இராமன்) பின்
தொடராதவர்கள் யாராவது இருக்கிறார்களா? யாரும் இல்லை
இவர்களைத் தவிர. பெரிய சேனையை உடைய சக்கரவர்த்தி தசரதனை விட்டுப் பிரியாத அவனது
மனைவியர் நகர் நீங்காமல் இருந்தனர். தெய்வாம்சம் பொருந்திய பெரும் அயோத்தி
மாநகரில் இருந்த சித்திரங்கள் பின்தொடரவில்லை. உயிர் இல்லாத காரணத்தால் ஓவியங்கள்
செல்லவில்லை என்று சொல்வதன் மூலம் பின்தொடராமல் இருந்த அனைவரும் உயிர் இருந்தும்
ஓவியங்கள் போல உயிரற்றவர்களாக மாறிப்போனார்கள் என்பதைக் கம்பன் அழகாக
காட்டுகிறான்.
பின்தொடர்ந்து
வந்தவர்கள் அனைவரும் உறங்க, உறங்காமல் விழித்துக்
கொண்டிருந்த மானவனான இராமன், குற்றமற்ற சிறந்த குணங்களைக்
கொண்ட சுமந்திரனை அழைத்து “உன்னால் ஆக வேண்டிய காரியம் ஒன்று
உள்ளது. அதை கேட்பாயாக” என்று சொல்லத் தொடங்கினான்.
“என்
மீது பேரன்பு கொண்ட இவர்களை இங்கிருந்து போகச் செய்வது இயலாத காரியம். இவர்கள்
இங்கிருந்து நகராமல் நான் வனம் செல்வதும் கடினம். அதனால் என் தந்தைக்கு ஒப்பானவனே!
நீ ரதத்தை இங்கிருந்து அயோத்திக்குச் செலுத்திக் கொண்டு போ. தேரின் சுவடுகளைப் பார்த்துவிட்டு
நான் அயோத்தி திரும்பிவிட்டேன் என்று நினைத்து அவர்களும் திரும்புவர். இதை நீ
எனக்காக செய்யுமாறு வேண்டுகிறேன்” என்று இராமன்
சுமந்திரனிடம் கேட்கிறான்.
“வலிமையான
புலன்களையும் கல்லாலாகிய மனதையும் உடைய அறிவற்ற வஞ்சகனாகிய நான், உடல் அழியுமாறு மனம் வருந்தி கலங்கியிருக்கும் தசரதனிடம் உன்னுடைய நற்சொற்களைக்
கொண்டு போய் சேர்க்கப் போகிறேனா? அல்லது தென்புலத்தின் தலைவனாகிய
எமனின் தூதுவனாகப் போகிறேனா?” என்று சுமந்திரன் புலம்புகிறான்.
“நான்கு
திசையிலிருந்தும் உடன் சென்றுள்ள மாந்தர்களும் அயோத்தி நகர மக்களும் உன் மகனை மீண்டும்
அழைத்து வருவார்கள் என்று தசரதனை ஆறுதல் கூறி தேற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கையில், ஐயனே! என்னுடைய
சாவை நிகர்த்த சொல்லால் கொலை செய்து விடுவேனோ என அச்சமாக உள்ளது” என்று சுமந்திரன் கலங்குகிறான். இதன் தொடர்புடைய பாடல்கள்
கீழே:
ஏவிய
குரிசில் பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை அம் மன்னை நீங்கலாத் தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர் ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால். (1840) |
ஏனையரும் இன்னணம்
உறங்கினர்; உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை, 'வா' வென்று, 'ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால் மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள்' என விளம்பும் (1856) |
பூண்ட
பேரன்பினாரைப் போக்குவது அரிது; போக்காது,
|
||||
|
|
|||
'வன்
புலக் கல்மன மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால், உன் புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கெனோ? தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? (1861) |
||||
'"நால்திசை மாந்தரும், நகர மாக்களும்,
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன் தன்னை" என்று ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என் கூற்று உறழ் சொல்லினால், கொலை செய்வேன் கொலோ? (1862) |
||||
“அங்கி
(அக்னி) சாட்சியாக அசுவமேதம், புத்திர காமேஷ்டி போன்ற யாகங்களைச்
செய்து அருமையாய் பெற்றெடுத்த உன் ஆண் சிங்கம் வனம் புகுந்தது என்று சொல்லத்தான் நான்
செல்கிறேனா? கடைசியில் பார்த்தால், அரசர்
தசரதனுக்கு என்னைவிட கேகய நாட்டு அரசனின் புதல்வி கைகேயி நல்லவளாக ஆகிவிடுவாள் போலும்”
என்று சுமந்திரன் தான் கொண்டு செல்லும் செய்தியால் தசரதனுக்கு கைகேயியைவிட
மோசமான தீங்கிழைக்கப் போவதை நினைத்து வருந்தி பேசுகிறான்.
ஐம்புலன்களையும்
அடக்கி கரணமாகிய மனதையும் கடந்து மெய்ஞ்ஞானத்தோடு அணுகுபவர்களுக்கு காட்சி அளிக்க கூடியவனான
இராமன் தனது பெரிய கைகளால் சுமந்திரனை ஆரத் தழுவி அவனது கண்ணீரைத் துடைத்து, அவனை வேறு ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று பேசலானான்.
“ஒளி
பொருந்திய பெரிய ஆயுதம், மார்பின் நடுவே செல்லுமாறு செயல் புரிந்து
வீரத்தை வெளிப்படுத்துவது சூரத்தனம் அல்ல. இறந்தாலும்,
இருக்கும் செல்வம் அத்தனையும் இழந்தாலும் இறுதிவரை அறத்தின் வழி ஒழுகியவர்
இவர் என்று சொல்லப்படுவதே வீரம் பொருந்திய சூரருக்கு உரியதாகும்” என்று இராமன் சுமந்திரனிடம் கூறுகிறான்.
“உடல்
பிளந்து உயிரைக் குடிக்கும் வேலை உடைய சுமந்திரனே! காடு சேர்வதால்
வரும் இன்னல்களை நினைத்து நான் திரும்பினால், வானளவுக்குப் புகழ்
பெற்ற மன்னர்களைக் கொண்ட எனது தொல்குடி நான் பிறந்ததால் அறத்திலிருந்து வழுவியது என்று
யாராலும் சொல்லப்படக்கூடாது” என்று இராமன் தான் காட்டிற்குச்
செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறான்.
“கொடுத்த
வரத்திற்கு உண்மையானவாய் விளங்கி தன் குலத்தில் பிறந்த அரிய மகனை காட்டிற்கு அனுப்பியது
தசரதன் செய்த அருந்தவம். அவனது ஏவலை சிரமேற்கொண்டு வனம் போகுதல் நான் செய்யக் கூடிய
அருந்தவம். இதற்காக நீ வருந்தாதே” என்று சுமந்திரனுக்கு இராமன்
ஆறுதல் சொல்கிறான். இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே:
'"அங்கிமேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின்
சிங்க ஏறு அகன்றது" என்று உணர்த்தச் செல்கெனோ? எங்கள் கோமகற்கு, இனி, என்னின், கேகயன் நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்!' (1863) |
|
தடக்கையால்
எடுத்து, அவன் தழுவிக், கண்ணநீர்
துடைத்து, வேறு இருத்தி, மற்றினைய சொல்லினான்; அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம் கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான். (1865) |
'நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற,
மறப்பயன் வினைக்குறும் வன்மை அன்று அரோ; இறப்பினும், திரு எலாம் இழப்ப எய்தினும், துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. (1868) |
|
'கான்புறம் சேறலில் அருமை காண்டலால்,
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல்குலம், யான் பிறந்து, அறத்தினின்று இழுக்கிற்று என்னவோ?- ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! (1869) |
'வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள்
விட்டனன்,
மனக்கு அரும் புதல்வனை' என்றல் மன்னவன் தனக்கு அரும் தவம்; அது தலைக்கொண்டு ஏகுதல் எனக்கு அருந் தவம்; இதற்கு இரங்கல் எந்தை! நீ. (1870)
“நெறியில் நின்று வேதியர்களுக்கும்
வானுறையும் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் இனிய செயல்களை ஆற்றுமாறும், என் பிரிவால் உண்டான தனிமைத் துயரைய கைவிடுமாறும் பரதனிடம் சொல்லுமாறு வசிட்ட
முனிவரிடம் தன்மையாகச் சொல்வாயாக” என்று சுமந்திரனிடம் இராமன்
வேண்டுகிறான்.
கொடிய இத்துன்பம்
கைகேயியால் விளைந்தது என்று சிறிதளவும் கருதாத இராமன் சுமந்திரனிடம் “நீ மா தவம் புரிந்த வசிட்டரோடு அரண்மனை புகுந்து சக்கரவர்த்தி
தசரதனைத் தேற்றி என்னிடத்து அவர் கொண்ட அதே அருளைப் பரதனிடமும் காட்டுமாறு நான்
வரம் வேண்டியதாகச் சொல்” என்றான்.
“பதினான்கு ஆண்டுகள் கழித்து
வந்து அவரது பாதங்களைத் தவறாமல் பணிவேன் என்று முகபடாம் அணிந்த யானையை உடைய தசரத
மன்னனிடம் தளர்ச்சியற்ற வசிட்டர் மூலம் சொல்லி அவரை ஆறுதல்படுத்து” என்றும் சுமந்திரைனை நோக்கி இராமன் வேண்டினான்.
“முறைப்படி என்னைப் பயந்த அன்னையர்
மூவர்க்கும் குறையற்ற எனது வணக்கத்தை தெரிவித்துவிட்டு பிறகு அரசன் துயர் நீங்க அவரது
பக்கத்திலேயே இரு” என்று வேதங்களை மறைத்துக்கொண்டு காட்டில்
வசித்த இராமன் சுமந்திரனிடம் கூறினான். இதன் தொடர்புடைய பாடல்கள் கீழே:
“சக்கரவர்த்திக்கும் மாமியர்க்கும்
என்னுடைய வணக்கத்தை தெரிவித்து பிறகு என் பொன் நிற பூவையையும், கிளியையும் பாதுகாக்குமாறு என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என் சகோதரிகளிடம்
சொல்” என்று சீதை சுமந்திரனிடம் தெரிவித்தாள்.
வேறுபாடில்லாத
அன்பைக் கொண்ட சுமந்திரன் துன்பம் சிறிது குறைய “விடை கொடுங்கள்” என்று வீரனான இராமனிடம் விடைபெற்றுக்
கொண்டு பிறகு இலக்குமணனிடம் “நீங்கள் கூற ஏதாவது செய்தி உண்டா?” என கேட்கிறான்.
“அனைவரிடமும் கலந்தாலோசித்து, அறிவித்து இராமனுக்கு உறுதிப்படுத்திய கோசலநாடு என்னும் செல்வத்தை மணம்
மிகுந்த கூந்தலைக் கொண்ட கைகேயிற்கு மாற்றி அளித்த சத்தியவானாகிய தசரதனை இன்னும்
அரசன் என்று சொல்வது முறையா?” என இலக்குமணன் கிண்டலாக கேட்கிறான்.
புதல்வனை
காட்டுக்கு அனுப்பி காய்கனிகள் உண்ணுமாறு செய்துவிட்டு அரண்மனையில் அறுசுவை உணவு
உண்டு மகிழும் பொய் சொல்லாத சக்கரவர்த்தியிடம், உடலில் உயிரை பிடித்துக்கொண்டு இன்னும் வான் போகாமல் வலிமையோடு இருக்கிறேன்
என கூறு” என்று இலக்குமணன் கிண்டலாக சொல்கிறான்.
“ஒளி பொருந்திய வாளைக் கொண்டுள்ள
பரத மன்னன் என் அரசன் இராமனோடு பிறந்தவன் அல்ல. கோசல மண்ணை ஆளப்போகும் அவன் என்னோடும்
பிறந்தவன் அல்ல. சத்ருக்கனனுக்கும் நான் அண்ணன் அல்ல. வலிமையோடு பிறந்தவன் நான்.
இன்னும் வலிமையோடு இருக்கிறேன் என சொல்” என்கிறான் இலக்குமணன்.
இலக்குமணனின்
கிண்டல் பேச்சைக் கேட்ட இராமன் சிறப்பில்லாத
சொற்களைப் பேசாதே என்றவுடன் தேர் செலுத்துவதில் வல்லவனான சுமந்திரன் நிலத்தில் விழுந்து
வணங்கி துடிக்கும் மனதோடு அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
மனைவியின்
கற்பும், தம்பியும், தனது மேன்மையும், குற்றமற்ற கருணையும், ஞானமும், சத்தியமும் பாதுகாவலாக உடன் வர இராமன் நடு
இரவில் அவ்விடத்தை விட்டு நீங்கி காடு நோக்கி சென்றான். இதன் தொடர்புடைய பாடல்கள்
கீழே:
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
No comments:
Post a Comment