‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழில் (பிப்ரவரி, 2017) வெளியானது
வாழ்நாளெல்லாம்
நாம் பேசிய வார்த்தைகளைக்
கோர்த்து கோர்த்து சரடாக்குகிறேன்
இறப்பிற்குப் பின் எடுத்துச் செல்ல
யாருமற்ற அண்ட வெளியில்
அறுந்து தெறிக்கும் சொற்களோடு
புணர்ந்து திளைக்க
கடவுளிடம் பிரார்த்தனை செய்
உன் இன்சொற்களால் மட்டுமே
நான் கருவுற வேண்டுமென்று
sema sago
ReplyDelete